tamilnadu

img

சாலை வசதியின்றி அவதி

தேர்தலை புறக்கணித்து மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு

மேட்டுப்பாளையம், டிச. 30- காரமடை ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட மூணுகுட்டை மலைக் கிராம மக்கள் சாலை வசதிகோரி தேர்தலை புறக்கணித்து போராட் டம் நடத்தியதால் அப்பகுதி வாக்குச் சாவடி  வெறிச்சோடி காணப்பட்டது. கோவை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடை பெற்று வருகிறது. 1,214 பதவிகளுக்கு 4,017 பேர் போட்டியிடுகின்றனர். இதில், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளுக்கு நடை பெற்ற தேர்தலில் வாக்கு பதிவு துவங்கி யதுடன் கிராம மக்கள் மிகுந்த ஆர்வத் துடன் வாக்களித்தனர். ஆனால் வெள் ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட மூணுகுட்டை மலைக்கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. அடர்ந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள மூணுகுட்டை கிராமத் தில் மொத்தம் 63 குடும்பங்களை சேர்ந்த 145 வாக்காளர்கள் உள்ள னர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மூணுகுட்டை கிராமத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்கு சாவடியில் காலை 7 மணி முதல் தேர்தல் நடத்தும் அலு வலர்கள் காத்திருந்தும் யாரும் தங் களது வாக்கைப் பதிவு செய்ய வர வில்லை. 

முப்பது ஆண்டுகளாக தங்களது மலைக்கிராமதிற்கு சாலை வசதி யின்றி தவித்து வருவதாகவும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என புகார் தெரிவிக்கும் இக் கிராம மக்கள், மலைக்காட்டின் வழியே கரடு முரடான சாலையில் பயணிக்க இயலாமல் தங்கள் கிராமத்து குழந்தை கள் பள்ளி படிப்பிற்கு கூட சென்று திரும்ப முடிவதில்லை. முதியவர்கள், உடல் நலம் குன்றியோர் மருத்துவம் பார்க்க வழியில்லை என புகார் தெரி விக்கின்றனர். இதனால் தாங்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்றும், இந்த உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி சாலை வசதி செய்து கொடுக்காமல் இனி வரும் எந்த தேர்தலிலும் வாக்க ளிக்க போவதில்லை என தெரிவித்த னர்.  இதுகுறித்து தகவலறிந்த சமூக நலத்துறை வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய திட்ட அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி யும் பலனில்லை. அடுத்த ஆறு மாதங் களுக்குள் இங்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியபோது, ஒவ்வொரு முறையும் இதே போல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றி வருவதாக வும், இம்முறை நாங்கள் வாக் களிக்க விரும்பவில்லை என்றும் உறுதிபட தெரிவித்து தேர்தல் புறக் கணிப்பை தொடர்ந்தனர். இதனால், வாக்களிக்க யாரும் வராததால் வாக் குப்பதிவு மையம் வெறிச்சோடி  காணப்பட்டது.

;