மேட்டுப்பாளையம், ஆக.10- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் நீர்வரத்தின் வேகம் காரணமாக மின் உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்குதொடர்ச்சி மலைக்காடு களை நீர்பிடிப்பு பகுதிகளாக கொண்டு தமிழக – கேரள எல்லையோரத்தில் உள்ள மலை முகட்டின் நடுவே கட்டப் பட்டது பில்லூர் அணை. நூறு அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக உள்ளது. மேலும், பில்லூர் அணை யில் இருந்து பவானியாற்றில் வெளி யேற்றப்படும் நீர் ஈரோடு மாவட்டத் தில் உள்ள பவானிசாகர் அணையை யும் நிரப்புகிறது. பில்லூர் அணையில் இருந்து தினசரி நூறு மெகாவாட் நீர்மின் உற்பத்தியும் செய்யப்படு கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய் யும் கனமழை காரணமாக கடந்த ஆக.5 ஆம் தேதி பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி யது. இதனையடுத்து அன்று பிற் பகல் முதல் அணையின் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானியாற் றில் திறந்து விடப்பட்டு வந்தது. இத னால் பவானியாறு கரைபுரண்டு ஓடத்துவங்கியது. இதனையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆரம் பத்தில் அணையில் இருந்து வெளி யேறும் உபரி நீரின் அளவு வினா டிக்கு 10 ஆயிரம் எனத்துவங்கி, அதுவே வினாடிக்கு 20 ஆயிரம், 40 ஆயிரம், 60 ஆயிரம் என நாள்தோறும் அதிகரித்தபடி இருந்தது. பின்னர் கடந்த ஆக.8 ஆம் தேதி பில்லூர் அணை கட்டப்பட்டதில் ( 1967 ஆம் ஆண்டு ) இருந்து இதுவரை இல்லாத வகையில் அணைக்கான நீர்வரத்தும் வெளியேற்றமும் வினாடிக்கு 80 ஆயி ரம் கன அடியாக உயர்ந்தது. இரவு வரா லாறு காணாத வகையில் வினாடிக்கு 88 ஆயிரம் கன அடியாக உயர்ந்து பவானி கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற் படுத்தியது. இந்நிலையில், மலைக்காட்டில் இருந்து அணைக்கு வரும் நீரின் வேகம் மிக அதிகமாக இருந்த கார ணத்தினாலும், அடர்ந்த காடுகள் வழியே வரும் மழை நீரில் சகதிகள் மற்றும் வெள்ளத்தின் வேகத்தில் அடித்து வரும் மரக்கட்டைகள் அதி கம் இருந்த காரணத்தினாலும் நீர் மின் உற்பத்தி பணியில் சிக்கல் ஏற் பட்டது. இதனால் நீர்மின் நிலையத் தில் உள்ள மோட்டார்கள் பழுதடை யும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகளின் உத்திரவின்படி தலா ஐம்பது மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு இயந்திரங்களும் நிறுத்தப் பட்டன. இதனால் தற்போது நூறு மெகா வாட் நீர்மின் உற்பத்தி பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை வறட்சி காலத்தில் நீர் பற்றாக்குறை யால் பில்லூர் அணையில் மின் உற் பத்தி பணிகள் சில நாட்கள் நிறுத் தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அணைக்கு வரும் அதிகளவு தண்ணீர், நீரின் வேகம் மற்றும் கழிவுகள் கலப்பால் இங்கு மின் உற்பத்தி தடை பட்டுள்ளது. அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு இருபதாயிரம் கனஅடியாக உள்ளது. இது பத்தா யிரம் கன அடியாக குறையும் போதே மீண்டும் மின் உற்பத்தி பணிகள் துவக்குவது குறித்து முடிவெடுக்கப் படும். அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு படிப்படியாக குறைந்து வரு வதாகவும், விரைவில் வழக்கம் போல் மின் உற்பத்தி பணிகள் துவங்கும் என அணையின் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.