tamilnadu

img

நாளை அகில இந்திய வேலைநிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்பு

சேலம், ஜன.6- அனைத்து தொழிற்சங்கங்க ளின் சார்பில் புதனன்று நடை பெறும் வேலை நிறுத்த போராட் டத்தில் சேலம் மாவட்டத்திலி ருந்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், 6 ஆயி ரம் ஆட்டோக்கள் இயங்காது என் றும் தொழிற்சங்க நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப் படுத்திட வேண்டும். வேலை வாய்ப்பை அதிகப்படுத்திட வேண்டும்.விவசாயிகளின் உற் பத்தி பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்திட வேண்டும்.பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங் களின் சார்பில் புதனன்று (ஜன.8) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்து சேலத்தில் உள்ள தொழிற் சங்க நிர்வாகிகள் செய்தியாளர் களை சந்தித்தனர்.  அப்போது அவர்கள் கூறு கையில், இந்த பொது வேலை நிறுத்தத்தில் சேலம் மாவட் டத்திலிருந்து சுமார் 50 ஆயிரம்  தொழிலாளர்கள் பங்கேற்க உள்ள னர். அன்றைய தினம் காலை முதல் சேலத்தில் உள்ள 6 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்காது. அரசு போக்குவரத்து ஊழியர்களும், சேலம் உருக்காலையில் பணியாற் றும் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.  இதேபோல்,  இக்கோரிக்கை களை வலியுறுத்தி சேலம் மாவட் டத்தில் 9 இடங்களில் போராட் டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், பொதுமக்களின் கோரிக் கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு தெரிவிக்கும் வகை யில் வரும் ஜன.8 ஆம் தேதி பகல் 12 மணி முதல் 12.10 வரை இரு சக் கர வாகனங்கள் முதல் அனைத்து  வாகனங்களையும் இயக்காமல்  தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க  வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.  முன்னதாக, இந்த செய்தியா ளர் சந்திப்பில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் விமலன், தொமுச பேரவை கவுன்சில் செயலாளர் பழனியப்பன், ஐஎன்டியுசி நடரா ஜன், எஸ்எம்எஸ் கோவிந்தராஜி, ஏஐசிசிடியு வாசுதேவன் உள் ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

;