tamilnadu

வாவிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடம்மாற்ற உடன்பாடு

திருப்பூர், ஆக.21 – திருப்பூர் வாவிபாளையம் பகுதி யில் அமைக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை 90 நாட்களில் வேறு இடத் திற்கு மாற்றுவது, வேறு இடம் கிடைக்காவிட்டால் கடையை நிரந்தர மாக மூடிவிடுவது என்று அரசு நிர் வாகத்துடன் போராட்டக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன் பாடு காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம், வாவிபாளை யம், சென்னியாண்டவர் கோவில் மைதானத்தில் கடந்த புதனன்று டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவரும், காங்கிரஸ் கட்சி யின் மாநில பொதுக்குழு உறுப்பின ருமான ஏ. ராமசாமி தலைமையில் ஆலோசனைக்  கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் திமுக பகுதி செய லாளர் வீ.ஜோதி, தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு வங்கி துணைத்தலை வர் ஏ.விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கே.பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, கொமதேக கிழக்கு மண்டல செயலாளர் டி.சாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழு உறுப்பினர் என்.காளியப்பன் மற் றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் என்.செங்குட்டுவன் கே. சுந்தரமுத்து, ஏ.தேவராஜ் உள்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், டாஸ்மாக் நிர்வா கத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்து வது, வாவிபாளையம் பேருந்து நிறுத் தத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொது நல அமைப்பு நிர்வாகிகள், குடி யிருப்போர் சங்க நிர்வாகிகள் பங் கேற்று வாயில் கருப்புத் துணி கட்டி அறவழியில் போராடுவது, மக்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைவரின் குடும்ப அட்டையையும், ஆதார் அட்டையை யும் திரும்பக் கொடுக்கும் போராட்டம் நடத்துவது, வாவிபாளையத்தில் டாஸ் மாக் கடையை அகற்றும் வரை திருப் பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப் பினரை சந்தித்து தொடர்ந்து முறையி டுவது என முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இப்பகுதியில் தீவிர போராட்டம் தொடங்கியது.

இதன் விளைவாக, அரசு தரப்பில் வெள்ளியன்று காலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலு வலகத்தில், மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இப்பேச்சு வார்த்தையில் வடக்கு வட்டாட்சியர் பாபு, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சௌந்தரபாண்டியன், காவல் ஆய்வா ளர் முனியம்மாள் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதில், வாவிபாளையத்தில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை 90 நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றுவது, வேறு இடம் கிடைக்க வில்லை என்றால் நிரந்தரமாக அந்த கடையை மூடிவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அனைத்து வகைப் போராட்டங்களை ஒத்தி வைப்பது என்று போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர். மேலும், கடந்த 8 தினங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற் றோர், ஒத்துழைப்பு வழங்கியோருக்கு போராட்டக் குழுவினர் நன்றி தெரி வித்தனர்.

;