tamilnadu

img

கோவில் முன்பு பன்றிகறியை வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை, ஜூன் 7-  கோவில் முன்பு பன்றிக் கறியை வீசிச்சென்ற சம் பவத்தில் கைது செய்யப் பட்ட ராம்பிரகாஷ் மீது குண்டர் சண்டத்தில் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது. கோவையில் கடந்த 29ஆம் தேதி சலிவன் வீதி யில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் சுவாமி திருக்கோயில் மற்றும் ஆஞ்ச நேயர் ராகவேந்தர் திருக் கோவில் ஆகிய இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சி வீசப்பட்டது. இது தொடர்பாக பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். வழக்குப்பதிவு செய்த ஆறு மணி நேரத்தில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இத னையடுத்து கைது செய்யப்பட்ட ராம்பிரகாஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அமைதியாக உள்ள கோவையில் மதக்கலவரங் களை தூண்டும் வகையில் கோவில் முன்பு பன்றி இறைச் சியை வீசிய ராம்பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவிட்டார். இதனையடுத்து சனியன்று இதற்கான நகல் மத்திய சிறையில் ராம்பிரகாஷிடம் வழங்கப்பட்டது.

;