சென்னை, செப்.9- சென்னை பெரம்பூர் எருக்கஞ்சேரியில் தாரணி என்ற பெண்வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 14கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. பெண் தாதாவான தாரணி கொடுங்கையூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து ஆட்களை வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறை ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். நெற்குன்றம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் மதன் (22). இவர் மீது கொடுங்கையூர், கோயம்பேடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்ளது. இவரும் தாரணியுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதனும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.