districts

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

உடுமலை, மே 6- உடுமலை அருகே உள்ள தம்பதியினர், கேரளாவில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மனநலம் பாதித்த தங்கள் 27 வயது மகளோடு சொந்த ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்தார்கள். தாய், தந்தை வெளியில் சென்றிருந்தபோது அவர்கள் தங்கி யிருந்த வீட்டின் உரிமையாளரான மோகன்குமார் என்பவர்  மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய் துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து மோகன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.  இந்த நிலையில் மன நலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மோகன்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சஷாங் ஷாய் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் மோகன்குமார் மீது குண்டர் சட்டத் தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தர விட்டார்.