திருப்பூர், டிச, 9- உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிச.9 ல் தொடங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த னர். இதில் அவினாசி ஒன்றியத்தில் ஆலத்தூர் 4, செம்பியநல்லூர் 2, பழங்கரை 1. தெக்கலூர் 1, ராமநாத புரம் 1, புலிபார் 1 என கிராம ஊராட்சி வார்டு உறுப்பி னர் பதவிக்கு 11 பேரும், சின்னேரிபாளையம், வேட்டு பாளையம் ஆகிய ஊராட்சி தலைவர் பதவிக்கு தலா ஒருவரும், தாராபுரத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 1 நபரும், குடிமங்கலத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 6 பேரும், காங்கேயத் தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 5 பேரும், குண்டடத்தில் 5 கிராம வார்டு உறுப்பினர்களுக்கும் , மடத்துக்குளத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பின ருக்கு 5 பேரும், மூலனூரில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 3 பேரும், பல்லடத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 5பேரும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு 1 நபரும், பொங்கலூ ரில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 4 பேரும், திருப்பூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 3 பேரும், உடுமலை பேட்டையில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 5 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 1 நபரும், ஊத்துக்குளி யில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேரும் மொத்தம் 63 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் தேர்தல் விபரத்தை வெளியிட்டார்.
இட ஒதுக்கீடு
அவிநாசி ஒன்றியத்தில் 31 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 270 வார்டுகள் அடங்கும். இவ்வறில் 36 வார்டுகள் எஸ்சி பெண்களுக்கும், எஸ்சி பொது 33 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது பெண் 108 வார்டுகளும், பொது 93 வார்டுகள் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், தாராபுரம் ஒன்றியத்தில் 16 கிராம ஊராட்சிகளில் 141 வார்டுகள் உள்ளன. இதில் எஸ்சி பெண் 21, எஸ்சி பொது 20, பொது பெண் 55, பொது 45. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சிகளில் 201 வார்டுகளில் பொது 66, பெண் 84, எஸ்சி பொது 25 மற்றும் எஸ்சி பெண்களுக்கு 26 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்டத்தில் உள்ள மொத்த கிராம ஊராட்சி வார்டுகள் 2295ல் எஸ்டி பெண்-1, பொது 813, பொது பெண் 927, எஸ்சி பொது 260 மற்றும் எஸ்சி பெண்களுக்கு 294 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 17 வார்டுகளில் பொது 6, பொது பெண் 7, ஆதிதிராவிடர் பொது 2, ஆதி திராவிடர் பெண்-2 என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டுகள் 170ல் பொது 61, பொது பெண் 69, எஸ்சி பொது 20, எஸ்சி பெண் 20 என பிரிக்கப்பட்டுள்ளன.