tamilnadu

img

31 ஆவது சாலை பாதுகாப்பு வாரம் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

 மேட்டுபாளையம், ஜன.20- 31 ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு வாகனப் பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் ஜன 20 தேதி முதல் 27 தேதி வரை 31 ஆவது சாலை  பாதுகாப்பு வாரமாக கடைபி டிக்கபடுகிறது.இதனை யொட்டி கோவைமாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திங்க ளன்று வட்டார போக்குவரத் துத்துறை மற்றும் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக இரு  சக்கிர வாகன பேரணி நடத்தப்பட் டது. மேட்டுப்பாளையம் காவல் துறை ஆய்வாளர் சென்னகே சவன் மற்றும் வட்டார போக்குவ ரத்து அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பேரணியை பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்த னர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் ஹெல்மெட் அணிந்த படி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மேலும் காவல்துறையினர், அதி விரைவு படை, அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கங்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என  பலர் பங்கேற்றனர். இப்பேர ணியானது மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவ லகம் அருகேயிருந்து துவங்கி பேருந்து நிலையத்தில் முடிவ டைந்தது.  இப்பேரணியின்போது, இரு  சக்கர வாகன விபத்தின் போது  ஹெல்மட் அணியாத காரணத்தி னால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவதா லும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுவதாலும் ஏற்ப டும் ஆபத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித மாக பதாதைகள் ஏந்தி செல்லப் பட்டன.
ஈரோடு
இதேபோல் ஈரோடு மாவட் டம், சம்பத் நகரில், வாகன விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணே சன், துணை போக்குவரத்து ஆணையர் கே.நெல்லையப்பன் ஆகியோரின் முன்லையில் ஆட்சி யர் சி.கதிரவன் துவக்கி வைத் தார்.
நீலகிரி
இதேபோல் நீலகிரி மாவட் டம், உதகை மத்திய பேருந்து  நிலையத்திலிருந்து துவங்கிய  இருசக்கர வாகன விழிப்பு ணர்வு பேரணியை மாவட்ட ஆட்சி யர் ஜெ.இன்னசென்ட் திவ்யா  துவக்கி வைத்தார். இப்பேரணி யில் திரளானோர் கலந்து கொண்டனர்.
கோவை
இதேபோல் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சி யர் கு.ராசாமணி துவக்கி வைத் தார். 600கும் மேற்பட்டோர் கலந்து கொணட இரு சக்கர வாகன பேரணியானது வட்டார  போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி அவினாசி சாலை, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி,  காந்திபுரம் வழியாக வ.ஊ.சி  மைதானத்தில் நிறைவடைந்தது.

;