tamilnadu

உள்ளாட்சி தேர்தலுக்கு 1704 வாக்குச் சாவடிகள் தயார்

மாவட்ட ஆட்சியர்

திருப்பூர், டிச. 2- திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு 1704 வாக்குச் சாவடி கள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த் திகேயன் தெரிவித்துள்ளார். .  இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கை 6.12.2019 அன்று வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் 6.12.2019 முதல் துவங் கும். வேட்பு மனு தாக்கல் செய்வ தற்கான இறுதி நாள் டிச.13  ஆகும். டிச. 16  முதல் வேட்பு மனுக் களை ஆய்வு செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற டிச.18 இறுதி நாளாகும். முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.27 மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30 அன்று நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணியுடன் முடிவடையும்.  வாக்கு எண்ணிக்கை ஜன வரி 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடவடிக் கைகள் ஜனவரி 4 ஆம் தேதி முடிவு பெறும். 

இதனைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி யேற்பு நடைபெறும்.  மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலை வர் ஆகியோரை தேர்ந்தெடுப்ப தற்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி     11 ஆம் தேதியாகும்.  திருப்பூர் மாவட்டத்தில் 17  ாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர்கள்,  170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய நேர்முக தேர்தல் நடை பெறவுள்ளது.  இப்பணிகளுக்கு 28 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் மற்றும் 363 உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்களும் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். மாவட்டத்தில் கிராமப் புறம் மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து 95 ஆயிரத்து 765 பேர் உள்ளனர். 

இதில் முதற்கட்ட தேர்தலில் திருப்பூர் ஒன்றியத்தல் 115, ஊத்துக்குளி 149, காங்கயம் 98, பல்லடம் 162, வெள்ளக்கோவில் 76, மூலனூர் 82 மற்றும் தாராபுரம் 102 என 122 ஊராட்சிகளில் மொத்தம் 784 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண் டாம் கட்ட தேர்தலுக்கு அவிநாசி ஒன்றியத்தில் 195 வாக்குச் சாவ டிகள், பொங்கலூர் 120, குண்ட டம் 127, உடுமலைப்பேட்டை 254 மற்றும் மடத்துக்குளம் ஒன் றியத்தில் 80 வாக்குச்சாவடிகள் என 143 கிராம ஊராட்சிகளில் 902 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. அனைத்து வாக்குச்சாவ டிகளிலும் குடிநீர் மின்சார வசதி மற்றும் இதர அடிப்படை வசதி கள் செய்யப்பட்டு தயார் நிலை யில் உள்ளன. இவை 129 மண் டலங்களாகப் பிரிக்கப்பட்டுள் ளன. வாக்கு எண்ணிக்கைக்கு 13 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;