tamilnadu

img

இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே...  

கொழும்பு
கடந்த 5-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற அடுத்த சில மணிநேரங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 225 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி 145 இடங்களை கைப்பற்றி (கூட்டணி கட்சிகளை சேர்த்து  150 இடங்கள்) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், புதிய பிரதமராக ஏற்கெனவே 3 முறை  பிரதமராக இருந்த  மகிந்தா ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று (ஞாயிறு) அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

கெலனியா ராஜமகா புத்த கோவில் வளாகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் ஜனாபதியும், சகோதரருமான கொத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் நாளை பதவியேற்பார்கள் எனவும், வருகிற 20-ந் தேதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

;