கொழும்பு
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என அந்நாட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் தேசிய பங்கு சந்தை திங்கள்கிழமை காலை முதலே கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. இதனால் கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகம் அரை மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. முந்தைய நாளைவிட 5.9% வரை பங்குச் சந்தை குறியீட்டெண் (S&P SL20) வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகம் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் 11 மணிக்கு மேல் பங்குச்சந்தை வணிகம் தொடங்கியது. இலங்கையின் அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்ததே பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.