புதுதில்லி:
இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடுசெப்டம்பர் 26 அன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு பிரதமர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின்படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கைஅரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது என்று மோடி தெரிவித்தார்.இலங்கை பிரதமர் ராஜபக்சே பேசுகையில், கொரோனா பெருந்தொற்று சூழலில், பிற நாடுகளுக்காகவும் இந்தியா செயலாற்றியதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் பற்றிஎரிந்த தீயை அணைக்கும் பணி, இரு நாடுகளுக்கும் இடையேயான பெரும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பாக அமைந்தது என்று கூறினார்.