tamilnadu

img

டிஜிட்டல் க்யூஆர் குறியீடு மூலம் கொரோனாவை தடுக்கும் சீனா...

பெய்ஜிங் 
பொது மக்களின் ஸ்மார்ட் போன்களில் சிகப்பு, மஞ்சள், பச்சை என க்யூஆர் ஆரோக்கிய குறியீடுகளை ஒதுக்கி, அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தி வருகிறது சீனா. இதனை ஜப்பான், ரஷ்யா நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்த புதிய தொழில்நுட்பம் ஒரு முக்கியமான பங்கு வகிப்பதாக சீனாவின் ஈ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் சுகாதார நிபுணர் சியான்-ஷெங் ஹுவா சிஎன்என் பிசினஸ் இனைணதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில்," மொபைல் தொழில்நுட்பத்தை வித்தியாசமான முறையில் பயன்படுத்தியுள்ள சீனா  மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த க்யூஆர் மூலம் வண்ண அடிப்படையிலான "சுகாதாரக் குறியீடு" முறையைப் பயன்படுத்தியுள்ளது. சுகாதாரக் குறியீடுகளை அதிகாரிகள் இன்னும் கட்டாயமாக்கவில்லை என்றாலும், பல நகரங்களில், க்யூ ஆர் குறியீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள்  தங்கள் குடியிருப்புகடிள  விட்டு வெளியேறவோ அல்லது  பொது இடங்களுக்கு செல்லவோ முடியாது. வூகானில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் க்யூ ஆர் கோடுகள் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இதற்காக சீனாவின் பிரபலமான இரண்டு இணைய நிறுவனங்களான அலிபாபா (பாபா) மற்றும் டென்சென்ட் (டிசிஹெச்) ஆகியவற்றின் உதவியைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆப்களை-த்தான் சீனாவில் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார குறியீட்டைப் பெற, மக்கள் தங்கள் பெயர், தேசிய அடையாள எண் அல்லது பாஸ்போர்ட் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பதிவுபெறும் பக்கத்தில் நிரப்ப வேண்டும். கடந்த 14 நாட்களில் அவர்கள் உறுதிப்படுத்திய அல்லது சந்தேகிக்கப்பட்ட  கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார்களா என்பதையும் அவர்கள் பயண வரலாற்றையும் தெரிவிக்க வேண்டும்.
காய்ச்சல், சோர்வு, வறட்டு இருமல்,  தொண்டை வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் அதற்காக குறியீட்டை  டிக் செய்ய வேண்டும்.

அதிகாரிகள்  மக்கள் அனுப்பும் செய்தியை ஆய்வு செய்து உரிய நிறங்களை அனுப்புவார்கள். சிவப்புக் குறியீட்டைக் கொண்டவர்கள்  14 நாட்களுக்கு அரசாங்க தனிமைப்படுத்தலுக்கு அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும், அம்பர் (சிவப்பு) குறியீடு உள்ள பயனர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள், அதே நேரத்தில் பச்சை குறியீடு உள்ளவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும்.
 

;