tamilnadu

img

இந்தியாவில் போலி மருந்துகள் விற்பனை - அமெரிக்க வர்த்தக அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் போலி மருந்துகளின் விற்பனை அதிகரித்து வருவதாக அமெரிக்க வர்த்தக அமைப்பு எச்சரித்து உள்ளது.

அமெரிக்காவின் கடந்த வியாழக்கிழமை அன்று, திருட்டு மற்றும் போலி சந்தைகள் குறித்து ஆண்டிற்கான சிறப்பு 310 அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் போலி சந்தைகள் மூலம் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக அமெரிக்காவின் வர்த்தக அமைப்பு (யூஎஸ்டிஆர்) குற்றம் சாட்டி உள்ளது.

இந்த அறிக்கையின் படி,”உலகளவில், சீனா மற்றும் இந்தியா போலி மருந்து விற்பனையில் முதன்மை வகிக்கின்றன. இந்திய சந்தையில் விற்கப்படும் மருந்துகளின் 20 சதவீதம் போலியானவையாகும். மேலும், நோயாளி உடல் நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றன. மேலும் போலி மருந்துகளை அதிகம் விற்பனை செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்த போலி மருந்துகள் ஆப்ரிக்கா, கனடா, கெரிபியன், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது. கடந்த 2018-ஆம், அமெரிக்க எல்லையில் சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த போலி மருந்துகளை பறிமுதல் செய்தது” என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”அமெரிக்காவின் இந்த புள்ளி விவரம் மிகைப்படுத்தப்பட்டவை. இந்தியாவில் போலி மருந்துகள் குறித்த பிரச்சனை இருக்கிறது. ஆனால் மொத்த மருந்துகள் விற்பனையில் அது 10 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. மேலும், இதற்கு தீர்வாக இரு புறமும் பிளாக் செயின் தொழில்நுட்பம் மற்றும் கியூஆர் கோடு போன்றவற்றை அமல்படுத்த இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.