tamilnadu

img

8 முறை வீசிய சூரிய காந்தப் புயல்!  

சூரியனில் நேற்று 8 முறை காந்தப் புயல் வீசியதாக கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.  

சூரிய காந்தப் புயல் குறித்து கொடைக்கானல் சூரியவியல் விஞ்ஞானி குமரவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் சூரிய காந்தப் புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் விஞ்ஞானிகள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

நேற்று வீசிய சூரிய காந்தப் புயல் மிதமாக இருந்ததாகவும் வரும் நாள்களில் இது மேலும் தீவிரமடையும் என்று கணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

முன்னதாக, பூமியைத் தாக்கவரும் இந்த சூரிய புயலால் வான்வழி போக்குவரத்து, செயற்கைக் கோள் செயல்பாடுகளில் சில இடையூறுகள் ஏற்படலாம் என்றும், காலநிலைகளுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் விலங்குகளும் கூட இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக்கவும், மேலும் இணைய சேவை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் என்ஓஏஏ மற்றும் எஸ்டபிள்யுபிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.