tamilnadu

img

மும்பையில் போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லை..... மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடமில்லை

திருவனந்தபுரம்:
கோவிட் மிக மோசமாக படரும் மும்பையின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தன்னார்வ சுகாதாரப்பணியாற்றி வரும் சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   மும்பையில் மட்டும் தினமும் ஆயிரக்கணக் கான நபர்களிடம் புதிதாக நோய் தொற்று உறுதிசெய்யப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோ ரது உயிர் பிரிகிறது. அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிக்கிறது. தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் காலியாக உள்ள மருத்துவமனைக்கு விரைகின்றன. கவனிப்பு இல்லாமல் பலர் ஆம்புலன்சில் இறக்கின்றனர். கொள்ளை நோய்க்கு முன்பு எந்த உதவியும் கிடைக்காத நிலையில் மும்பை வாசிகள் உள்ளதாக கூறுகிறார் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி துணை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.எஸ்.சந்தோஷ்குமார்.

நோயை கட்டுப்படுத்துவது சாத்தியமற்று அவதிப்படுகிறது மகாராஷ்டிரா. குறிப்பாக மும்பையில் நமது கற்பனைக்கு அப்பால் நோய்பரவி உள்ளது. மேலும் மேலும் சுகாதார ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதால், பல மருத்துவமனைகள் ஸ்தம்பித்து வருகின்றன. உயிர் பிழைப்பதற்கான இடம் தேடி அலைவதில் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. கேரளாவைப் போன்று பயனுள்ள கட்டுப்பாடுகள் எதுவும்ஏற்படுத்த முடியவில்லை என்பதே  டாக்டர்சந்தோஷ்குமாரின் வார்த்தைகள். நோய்த் தொற்றின் ஆதாரம் நோயாளிகளின் பெரும்பகுதிகளில் தெளிவாக இல்லை. புதிதாக திறக்கப்பட்டகோவிட் மருத்துவமனைகள் சில நொடிகளில் நிரப்பப்படுகின்றன.ரேஸ் கோர்சில் கோவிட் மருத்துவமனையை தொடங்க மும்பை மாநகராட்சி முடிவு செய்தது.

இது சூறாவளி அச்சுறுத்தலால் மாற்றப் பட்டது. 1,500 படுக்கைகள் கொண்ட செவன்ஹில் என்கிற பிரம்மாண்ட தனியார் மருத்துவமனையை அரசு கையகப்படுத்தியுள்ளது. 700நோயாளிகள் அதற்குள் அனுமதிக்கப்பட்டு வி்ட்டனர். 20 ஐசியு படுக்கைகள் மட்டுமே இங்கு உள்ளன. கேரளத்தில் இருந்து வந்துள்ள 18 பேர் கொண்ட குழு செவ்வாயன்று 20 கூடுதல் ஐசியு படுக்கைகளை தயார் செய்துள்ளது. 200 ஐசியு படுக்கைகள் தயாராக்குவது இந்த குழுவின் பொறுப்பு. 200 படுக்கைகள் கொண்ட ஐசியு செயல்பட 45 செவிலியர்கள் உட்பட 70 சுகாதார ஊழியர்கள் தேவை. இது தவிர தூய்மை பணியாளர்களும் தேவை. கேரளத்தில் இருந்து 20 பேர் புதனன்று வந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மும்பைக்கு உதவ சுகாதார ஊழியர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அதில் பெரும்பகுதியினர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். 

;