கொச்சி, மே 10- வெளி மாநிலங்களி லிருந்து கேரளத்துக்கு வரு வோர் முன்அனுமதி பெறு வது கட்டாயம் என்கிற அர சின் உத்தரவை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. மாநில எல்லையான வாளையாறில் முன்அனுமதி பெறாமல் சனியன்று வந்து சிக்கியுள்ளவர்களுக்கு அனு மதிச் சீட்டு வழங்கி கேர ளத்திற்குள் செல்ல அனு மதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கையொட்டி எழுந்துள்ள பிரச்சனைகளை நீதிபதிகள் ஷாஜி பி சாலி, எம் ஆர் அனிதா ஆகியோர் இடம்பெற்ற உயர்நீதிமன்ற த்தின் சிறப்பு அமர்வு ஞாயி றன்று விசாரித்தது. அப்போது, அரசுக்காக வாதா டிய கூடுதல் தலைமை வழக் கறிஞர் ரஞ்சித் தம்பான், ஒரு மருத்துவ அவசரநிலையை எதிர்கொள்ள ஏற்படுத்தி யுள்ள கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளது என கூறினார். வாள யாறில் மட்டுமே அதிகமா னோர் உள்ளனர். அனுமதி கிடைப்பதைப் பொறுத்து அவர்களை அனுமதிக்க லாம்.
அனுமதிச் சீட்டு இல்லா மல் வரும் யாரையும் இனி அனுமதிப்பதில்லை என்பதே அரசின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். கேரளத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் கோவை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கர்ப்பிணிகள், பத்து வயதுக்கு உட்பட குழந்தை கள் போன்றோருக்கு முன்னுரிமை அடிப்படை யில் அனுமதி அளிக்கு மாறு நீதிமன்றம் தெரி வித்துள்ளது. சனியன்று எல்லையில் வந்தவர் களுக்கு மட்டுமே நீதிமன்ற உத்தரவு பொருந்தும். இதை ஒரு முன்வழக்கமாக கொள்ள முடியாது. அனு மதி சீட்டுடன் வந்தால் மட்டுமே இனி அனுமதிக்க வேண்டும் என்கிற அரசின் நிலைபாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஊரடங்கின் பகுதி யாக அரசு பிறப்பித்த உத்தரவு களை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த உத்தரவுகள் பொது நலன் கருதி பிறப்பிக்கப்பட்டவை. மக்களுக்கு எதிரானவை அல்ல. அரசுக்கு இதில் வேறு ஆர்வம் இல்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.