tamilnadu

img

பிரான்ஸ் பொருளாதார வல்லுநர் தாமஸ் பிகெட்டி கேரளாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்

பிரான்ஸ் பொருளாதார வல்லுநர் தாமஸ் பிகெட்டி கேரளாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக கேரள முதல்வர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.


அரசுமுறை பயணமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். நேற்று பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற அவர் தலைநகர் பாரிசில் பொருளாதார சமமற்ற நிலையை குறைக்க பல ஆய்வுகளை நடத்திய தாமஸ் பிகெட்டியை சந்தித்தார். ஒரு மணிநேர சந்திப்பிற்கு பிறகு கேரள முதல்வர் அலுவலகம் தகவல் வெளியிட்டது.


அதில் தாமஸ் பிகட்டி கேரளாவிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும், அவர் கேரளாவின் நில சீர்திருத்தங்கள் மற்றும் கேரள அரசு கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தாமஸ் பிகெட்டி கேரள அரசின் திட்டங்கள் அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளதாக தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது.


கேரளா மாற்று வளர்ச்சி பாதையில் செல்கிறது; சமூக நலத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் வருமானம் சமநிலையற்ற நிலை அதிகரிப்பது வருத்தம் அளிக்கிறது. சமூகத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய இந்த அரசு சிறப்பு கவனம் அளிக்கும் என கேரள முதல்வர் கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.