ஓணம் மலையாள மக்களின் தேசியத் திருவிழாவாகும். சமத்துவ, சகோதரத்துவ சிந்தனைகளை ஓணம் வெளிப்படுத்துகிறது. மாவேலி மன்னன் ஆட்சி நிலவிய பழங்காலத்தில் மனிதர்கள் அனைவரும் சமத்துவத்துடனும் திருட்டு, துரோகம், பொய் என்பவை எள்ளளவிற்கும் இல்லாமலும் வாழ்ந்தார்கள். இது முற்றிலும் ஒரு சோசலிசத்தின் அடையாளமாகும். மனிதகுல வளர்ச்சியின் வரலாற்றை வாசிக்கும்போது அதன் ஆரம்ப நிலைகுறித்து மாமேதை கார்ல் மார்க்ஸ் அது ஒரு பழமையான கம்யூனிசம் என்று குறிப்பிடுகிறார். வர்க்கங்கள் இல்லாததாக, சுரண்டல்கள் இல்லாததாக அந்தக் காலகட்டம் இருந்தது. அதற்குப் பிறகு அடிமைச் சமூகம் உருவானபோதுதான் வர்க்கங்கள் உருவாயின. இன்றைய முதலாளித்துவ காலகட்டத்தில் தொழிலாளி-முதலாளி வர்க்கத்தின் மோதல் வளர்ந்து கொண்டிருக்கிறது. சில நவீன மார்க்சிஸ்ட்டுகள் பிரச்சாரம் செய்வதுபோல வர்க்க-மதச் சிந்தாந்தம் என்பது பழமையானதல்ல. தொழிலாளிவர்க்க முன்னேற்றம் வலுமிக்கதாக உலக அரசியல் அரங்கிலும் இந்தியாவிலும் வளர்ந்து வந்துகொண்டிருந்த சூழலில் கோவிட்-19 வெடித்துப் பரவியது. இந்தக் கொடிய தொற்றுநோய் உலகமெங்கிலும் இந்தியாவிலும் பொருளாதாரத் துறையை முற்றிலும் சிதைத்துவிட்டது.
கேரளம் இந்தியாவின் ஒரு பகுதி என்ற நிலையில் இந்தக் கொடிய தொற்று நோயிலிருந்து மீட்சிபெறுவதற்காக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் எட்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரைப் பறித்த தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான ஒன்றுபட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி, இடையிடையே சோப்பு உபயோகித்து கை கழுவி இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் பெரும் முயற்சியில் மனிதகுலம் முழுவதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சூரியனிலிருந்து ஒரு பகுதி பிரிந்து பூமி உருவான பிறகு பல்லாயிரம் ஆண்டுகள் பூமியில் மனிதவாசமே இல்லாமல் இருந்தது. சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின்படி நவீனகால மனிதன் பிறந்தான். முதலாளித்துவக் காலகட்டத்தில் வாழ்ந்துவருகிற மனிதனுக்கு பணத்தின் மீதான ஆசை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த வேகம் மனிதனை இயற்கை வளங்களைச் சுரண்டுகிற நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் மாசு, புவி வெப்பம் ஆகிய நிகழ்வுகள் மிகவும் கடுமையாகியுள்ளன. இந்த நிலையில் கிரகங்கள்-குறிப்பாக பூமி இதை எதிர்கொள்வதற்கான நிலையை தகவமைத்துக் கொள்கிறது என்று இலக்கிய மேதை பவ்லோ கொய்லோ விவரித்துள்ளார். மாமேதை கார்ல் மார்க்ஸ் மனிதன் பூமியின் விருந்தாளியாவான் என்று விவரித்துள்ளார். இந்தச் சூழலில் 2020ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையை எல்லாவிதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு வீட்டிலிருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.