tamilnadu

img

நவீன சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் கேரள முதல்வர்  பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம், செப்.22- சிறுநீரக நோய்க்கான அதிநவீன அறுவை சிகிச்சையான ரெட்ரோ பெரிற்றோனோஸ்கோபி போன் றவை அனைவருக்கும் கிடைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரக சிகிச்சை பிரிவின் பொன்விழா கொண்டாட் டத்தை ஞாயிறன்று துவக்கி வைத்து பினராயி விஜயன் பேசியதாவது: திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் 2009 முதல் இந்த ஏற்பாடு உண்டு. மிகவும் பாது காப்பான உள்ளுறுப்புகள் அறுவை சிகிச்சையாகும் இது. ஆனால், வழக்கமான அறுவை சிகிச்சையை யே பெரும்பாலானவர்கள் விரும்பு கின்றனர். எனவே, நோயாளி களுக்கு இதுகுறித்த விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கிப்பியின் உதவியுடன் தாலுகா மருத்துவமனைகளிலும் மாவட்ட மருத்துவமனைகளிலும் 44 டயாலி சிஸ் பிரிவுகள் மூன்று ஆண்டுகளில் நிறுவப்பட்டன. இதில் 30 டயாலி சிஸ் பிரிவுகள் செயல்படத் துவங்கி யுள்ளன. மீதமுள்ள 14 இடங்களி லும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் 22 மருத்துவமனைகளில் 100 டயா லிசிஸ் பிரிவுகள் துவங்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என முதல்வர் கூறினார். விழாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தலை மை வகித்தார். சிறுநீரகவியல் பிரிவின் முன்னாள் உயர் அதிகாரி களின் புகைப் படங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். சுகாதாரக் கல்வித்துறை இயக்கு நர் டாக்டர்.ரம்லா பீவி உள்ளிட் டோர் பேசினர்.