tamilnadu

img

பாஜக, யுடிஎப்பை தோற்கடிக்கும் நோக்கத்துடன் எல்டிஎப் வெகுஜன அடித்தளம் விரிவாக்கப்படும்

திருவனந்தபுரம், ஜுலை, 4- பாஜகவையும் யுடிஎப்பையும் தோற் கடிப்பது என்கிற நோக்கத்துடன் எல்டி எப்பின் வெகுஜன அடித்தளத்தை விரி வாக்குவதே நோக்கம். தேர்தல்களில் யுடி எப்பை (ஐக்கிய ஜனநாயக முன்னணி) தோற்கடிக்கும் வலு இன்றைய நிலையில் எல்டிஎப்புக்கு (இடது ஜனநாயக முன்னணி) உள்ளது. அதே நேரத்தில் யுடிஎப்பிலிருந்து வெளியேறிய ஒரு கட்சி அங்குதான் திரும்பி செல்ல வேண்டும் என்கிற நிலைபாடு இல்லை. என சிபிஎம் கேரள மாநில செயலாளர் கொடி யேரி பாலகிருஷ்ணன் கூறினார். திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த கொடியேரி பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது: கேரள காங்கிரஸ் ஜோஸ் பிரிவை அச்சு றுத்தி அடிபணிய வைக்கும் யுடிஎப்பின் நகர்வு தகர்ந்துவிட்டது. யுடிஎப்புக்குள் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உள்மோதலின் பிரதிபலிப்பே ஜோஸ் கே மாணி பிரிவை வெளியேற்றும் முடிவு. சண்டை என்பது யு.டி.எப் இன் உள்ளார்ந்த தன்மை. சென்னிதாலாவும் கூட்டாளிகளும்  தலைமை ஆசிரியர் மற்றும் குழந்தைக ளாக விளையாடுகிறார்கள்.

யுடிஎப் பெரும் நெருக்கடியில் உள்ளது.   கடந்த தேர்தலில் யுடிஎப் உடன் இருந்த எல்.ஜே.டி இப்போது எல்.டி.எப். இல் உள்ளது. கேரள காங்கிரஸை வெளியேற்றி யதாகக் கூறியவர்கள் இப்போது தற்காலிக விலக்கல் என்கிறார்கள. வகுப்பிலிருந்து வெளியேற்றினாலும் பள்ளியிலிருந்து வெளியேற்றவில்லையாம். பி.ஜே.ஜோசப் மற்றும் கே.எம்.மணி ஆகியோர் அடங்கிய கேரள காங்கிரஸ்தான், கடந்த தேர்தலுக்குப் பிறகு சிறிது காலம் யு.டி.எப்பில் இருந்து விலகி நின்றது. தமக்குள் மோதுவதும், வெளியேற்று வதும் மீண்டும் ஒன்றாவதும் யுடிஎப்பில் நடப்பதுதான். ஆனால், ஜோசப் பிரிவை வெளியேற்றியது யுடிஎப்பை சீர் குலைக்கும். அதை பயன்படுத்த வேண்டும் என்பதே சிபிஎம்மின் நோக்கம். நாங்கள் மட்டுமே போதும் என்கிற நிலைப்பாடு சிபிஎம்முக்கு இல்லை. எல்டிஎப்புக்கு சாதக மான அரசியல் சூழ்நிலைதான் இப்போது கேரளத்தில் உள்ளது. பெரும் சவால்க ளை கடந்துதான் அரசு செய்படுகிறது. இந்த அரசு நாட்டுக்கு தேவை என்கிறே பொதுக்கருத்து உயர்ந்து வருகிறது.

எதிர்க்கட்சியின் வெத்துவேட்டு
அரசுக்கு எதிராக எதுவும் சொல்ல முடியாததால் எதிர்க்கட்சி வெத்து வேட்டு களை வெடித்துக்கொண்டிருக்கிறது. அரசு ஊழல் இல்லாமல் செயல்படுகிறது. எந்தவொரு குற்றச்சாட்டிலும் எதிர்க்கட்சி உறுதியாக நிற்கவில்லை. கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், சில நாட்களுக்குப் பிறகு அரசு அளித்த விளக்கத்தில் திருப்தி அடைவதாகக் கூறு வதையும் எதிர்கட்சி வழக்கமாக கொண்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு களை கட்சி பார்க்க வேண்டியதில்லை. தெளிவான சான்றுகள் இருந்தால்,எதிர்க் கட்சிகள் முறையாக விஜிலன்சையோ நீதி மன்றத்தையோ அணுகலாம் என்று கேள்வி ஒன்றுக்கு கொடியேரி பதிலளித்தார்.

ஜோஸின் அரசியல் நிலைபாடு என்ன?
கேரள காங்கிரஸ் ஜோஸ் கே மணி பிரிவுடன் எல்.டி.எப் எந்த விவாத மும் நடத்தவில்லை. ஜோஸ் கே மணி பிரிவு எடுக்கும் அரசியல் நிலைப் பாட்டை அடிப்படையாகக் கொண்டது எல்.டி.எப் அணுகுமுறை. அவர்கள் நிலையை குறிப்பிடவில்லை. அதன் பிறகு சிபிஎம்மும் எல்.டி. எப்பும் விவாதித்து முடிவு செய்யும். யு.டி.எப்பை காப்பாற்றும் பொறுப்பு எல்.டி. எப் க்கு இல்லை. மற்றொரு கட்சியை முன்ன ணியில் கொண்டு செல்வது குறித்து ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கருத்துக்க ளைக் கொண்டிருக்கலாம். சிபிஐ மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் இதைத் தான் தெளிவுபடுத்தினார். அதில் எந்த தவறும் இல்லை. சிபிஐ உடனும் விவா தித்துதான் இதுகுறித்து முடிவெடுக்கப் படும். சிபிஎம்- சிபிஐ இடையே தற்போது எந்தவிதமான மோதல்களும் இல்லை. இது குறித்து எங்களுக்குள் கூடுதல் விவாதம் தேவைப்பட்டால், அது நடக்கும். கேரள காங்கிரஸ் ஜோஸ் பிரிவுக்கு பல இடங்களில் மக்கள் செல்வாக்கு உள்ள தாக கூறப்படுகிறது. ஒரு தேர்தலில் தோற்றால், அது மொத்தமாக இழப்பை ஏற்படுத்தும் என்று கருதவில்லை. தனி யாக நிற்க யாருக்கும் சக்தி இல்லை என்று கானம் ராஜேந்திரன் சொல்வது சரிதான். 1965 தேர்தல் அனுபவம் நம்முன் உள்ளது.  யுடிஎப் சில தொகுதிகளில் வெற்றி பெற வும் சில இடங்களில் தோற்கடிக்கவும் ஜோஸ் பிரிவால் முடியும் என்று மதிப்பி டப்பட்டுள்ளது. சிபிஎம்முக்கு சுயமாக அரசு அமைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் முன்னணியாகவே இருப்போம். யுடிஎப்பில் நெருக்கடி முற்றுவதற்கு உதவும் பிரச்சனைகள் முன்னுக்கு வரும்போது அதில் தலையிடுவோம் என்றும் கோடி யேரி கூறினார்.

வகுப்புவாத கூட்டுக்கு முயற்சி 
சாதி மத சக்திகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் முயன்று வருகின்றன. ஜமா அத்தே இஸ்லா மியுடனும் எஸ்டிபிஐயுடனும் கூட்டணி அமைத்தால் இன்றைய யுடிஎப் முன்னணி என்பது முஸ்லீம் தீவிரவாத சக்திகளால் கட்டுப்படுத்தத்தக்க ஒரு ஏற்பாடாக மாறும் என கொடியேரி பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.  ஜமா அத்தே இஸ்லாமி உருவாக்கிய கட்சியே வெல்பேர் பார்ட்டி. முஸ்லீம் மத தேசம் வேண்டும் என வெளிப்படை யாக அறிவித்துள்ளவர்கள். முஸ்லீம்கள்  மத்தியில் ஆர்எஸ்எஸ் போல் செயல்படும் அமைப்புதான் எஸ்டிபிஐ. இத்தகைய கூட்டணிக்கு எதிராக முஸ்லீம்கள் மத்தி யிலேயே பல அமைப்புகள் முன்னுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இவை இந்த கூட்டணியின் ஆபத்து குறித்து வெளிப்ப டையாக சுட்டுக்காட்டுவதாக கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.