tamilnadu

img

தர வேண்டியதையாவது முழுமையாக தாருங்கள்

மத்திய அரசுக்கு  கேரள நிதியமைச்சர் வேண்டுகோள் 

திருவனந்தபுரம், மே 3- நெருக்கடி சூழ்ந்துள்ள நிலையில் மத்திய அரசு கேரளத்துக்கு தர வேண்டிய தொகையையாவது முழு மையாக தர வேண்டும் என கேரள நிதி அமைச்சர் டாக்டர் டி.எம். தாமஸ் ஐசக் கேட்டுக்கொண்டார்.  சனியன்று செய்தியாளர்களிடம் தாமஸ் ஐசக் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு உதவாவிட்டாலும் தர வேண்டிய நிலுவைகளையாவது முழுமையாக தர வேண்டும். மத்திய அரசின் மாற்றியாக வேண்டும். மாநிலங்களை யும் மக்களையும் ஒன்றிணைத்தால் மட்டுமே கொரோனா வுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். சம்பளம் கொடுக்க கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5ஆம் தேதி இந்த கடன் தொகை கிடைக்கும். ரிசர்வ் வங்கி தற்காலிகமாக கடன் வாங்கு வதற்கான வரம்பை அதிகரித்துள்ளது. இது ரூ.2000 கோடி யாக அதிகரித்தாலும் பரவாயில்லை. 

கடன் தொகையில் 35 முதல் 40 சதவிகிதம் திருப்பிச் செலுத்தும் தொகையாகும். மீதமுள்ள தொகைதான் கிடைக்கும். ஜிஎஸ்டி வருவாய் வெகுவாகக் குறைந் துள்ளது. எதிர்பார்த்ததில் நான்கில் ஒருபகுதிகூட கிடைக்கவில்லை. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வருவாய் மிகவும் குறைந்துவிட்டது. இந்த மாதம் மீண்டும் நிலைமை மோசமடையும். கொரோனா பாதிப்புகளுக்கு அளிக்கும் சலுகைகளின் சுமையை மாநில அரசுகள் மீதும் மக்கள் மீதும் மத்திய அரசு சுமத்துகிறது. இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.

;