tamilnadu

img

கேரளத்தின் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பு....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் வெளியே சென்று படிக்க முடியாது என்பதால் இந்த ஏற்பாடு 2020-21 கல்வியாண்டிற்கு மட்டும் என இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளங்கலை படிப்புகள் அதிகபட்சம் 70 இடங்களாக உயர்த்தப்படும். தற்போது 50 முதல் 60 இடங்களாக உள்ளன. உச்சவரம்பு உயர்த்தப்படுவதால், ஒவ்வொரு படிப்புகளிலும் 10 முதல் 20 இடங்கள் வரை அதிகரிக்கும். முதுகலை படிப்புகளைப் பொறுத்தவரை அறிவியலில் அதிகபட்சம் 25 இடங்களையும் கலை மற்றும் வர்த்தகத்தில் 30 இடங்களையும் கூடுதலாக பெறலாம்.இதற்கான பொறுப்பு கல்லூரிகளுக்கு இருக்கும். அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படக்கூடாது.

பல்கலைக்கழகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் திறன்களை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது அதிக இடங்கள் இருந்தால், அவை அப்படியே நீடிக்கும்.  அதிகரிக்கப்படும் இடங்கள் புதிய கல்வி ஆண்டுக்கான ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கப்படும்.
கோவிட் காலத்திலும் தகுதியான எந்த மாணவரும் உயர்கல்வியை இழக்கக்கூடாது. மாநிலத்தில் 71 அரசு கல்லூரிகள், 197 உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் உதவி பெறாத 600 கல்லூரிகள் உள்ளன என்றார்.

;