tamilnadu

img

சகிப்பின்மையின்மை சாட்சியமான ஏசியாநெட் விவாதங்களில் பங்கேற்பதில்லை: சிபிஎம்

திருவனந்தபுரம்:
தனக்கென சிறப்பு நிகழ்ச்சிநிரலைக் கொண்ட- சகிப்பின்மையின் சாட்சியமான ஏசியாநெட் செய்தி விவாதங்களில் தங்களது பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று கேரள சிபிஎம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க தொலைக்காட்சி விவாதங்கள் ஒரு தளமாகும். ஆனால்ஏசியாநெட் நியூஸ் சானலின்‘செய்தி நேரம்’  நிகழ்ச்சியில்கடைசி சில நாட்களில் நடந்தவிவாதம் சிபிஎம் பிரதிநிதிகளுக்கு உண்மைகளை முன்வைக்கவும் கட்சியின் நிலைப் பாட்டை தெளிவுபடுத்தவும் ‘நேரமில்லாத’ நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இந்த ஜனநாயக விரோதத்தை எதிர்த்து இந்த சேனலில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று சிபிஎம் முடிவு செய்துள்ளது.

சாதாரண நிலையில் சிபிஎம்எதிர் நிலையில் 3 பிரதிநிதிகளுடன் அதே நிலைபாடுடன் குறுக் கீடு செய்யும் நெறியாளர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பு சிபிஎம் பிரதிநிதிக்கு உள்ளது. ஆனால் நெறியாளர் சாதாரண மரியாதை கூட காட்டாமல் ஒவ்வொரு பதிலிலும் தொடர்ந்து தலையிடுகிறார். கடந்த சில நாட்களில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜீவ் பங்கேற்ற விவாதத்தில் 13 முறைநெறியாளர் தடை ஏற்படுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராஜேஷ் பேசும்போது 17 முறையும் எம்.ஸ்வராஜ் எம்எல்ஏ பேசும்போது 18 முறையும் நெறியாளர் தலையிட்டார்.மூன்று அரசியல் எதிராளிகளுடன் நெறியாளரும் முன்வைக் கும் குற்றச்சாட்டுகளுக்கு 30 நொடிகளில் சிபிஎம் பிரதிநிதி பதிலளிக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு அங்கீகரிக்க முடியாதது. இந்த நேரத்துக்குள் பதிலளிக்கும்போது ஒலி நிறுத்தம் செய்யும் இத்தகைய விவாதங்கள் சகிப்பின்மையின் சாட்சியமாக உள்ளன.

உண்மைகளுக்கு அஞ்சும், இந்த ஊடகங்கள் சிபிஎம் நிலைப்பாட்டை மக்கள் அறியக்கூடாது என்று விரும்புகின் றன.  ஜனநாயக ரீதியான விவாதத்தின் அனைத்து சாத்தியப்பாடுகளை தடுத்தும் சிபிஎம்மின் கருத்துகளை தெரிவிக்கவும், எதிராளிகளுடன் நெறியாளரும் முன்வைக்கும் பொய்களை அம்பலப்படுத்தவும் வாய்ப்பில்லாத ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது தவறென சிபிஎம் கருதுகிறது. எனவே, ஏசியாநெட் ‘செய்தி நேரம்’ விவாதங்களில் சிபிஎம் பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட் டது.  ஏசியாநெட், மனோரமா உட்பட பல ஊடகங்களும் தொடர்ந்து பொய் செய்திகள் வழங்கி சிபிஎம் விரோத மனப்பான்மையை உருவாக்க முயற்சிக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது அம்பலமாகி வருகின்றன. சிபிஎம் விரோதபொய் செய்திகள் ஒளிபரப்பும் போதும்கூட எந்த ஒரு சானலையும் புறக்கணிக்க சிபிஎம் முடிவுசெய்ததில்லை. ஆனால் விவாதத்தின் ஜனநாயக விதிமுறைகள் முற்றிலும் மீறப்படும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளது. வெவ்வேறு நிலைப் பாடுகளை மக்களுக்கு தெரிவிப்பதே விவாதத்தின் நோக்கம்.ஜனநாயக விரோத அணுகுமுறை இல்லாத எந்த தொலைக்காட்சியிலும் சிபிஎம் கருத்துகளையும் நிலைபாடுகளையும் தெரிந்துகொள்ளலாம் எனசிபிஎம் மாநிலக்குழு தெரிவித் துள்ளது.

;