tamilnadu

img

சுகாதார ஊழியர்களுக்கு மனச்சோர்வு அளிக்காதீர் ஊடகங்களுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள்

திருவனந்தபுரம், ஜுலை 23- கோவிட் செய்திகள் ஊட கங்களால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். அதில் அரசை விமரிசிப்பதற்கு எதிர்ப் பில்லை. ஆனால் மாதக் கணக்கில் இரவு பகலாக உழைக்கும் சுகாதார ஊழி யர்களுக்கு மனச்சோர்வு அளிக்கும் குற்றச்சாட்டை தவிர்க்க வேண்டும். தவறான பிரச்சாரத்தை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டாம் என கேரள முதல்வர் கேட்டுக்கொண்டார்.    செய்தியாளர்களிடம் இதுகுறித்து கேரள முதல்வர் மேலும் கூறியதா வது: கோவிட் டை கேரளம் சமாளித்து வருகிறது. விழிப் புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன.  ஆனால் அண்மைக் காலத்தில் சில இடங்களில் அதில் கசிவு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. இன்று (ஜுலை 22) ஒரு செய்திச் சானலின் தற்போதைய செய்தியாக கேரளத்தில் கோவிட் மர ணம் அதிகரிக்கிறது என்று மீண்டும் மீண்டும் காட்டப் பட்டது. உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது.

ஆனால், ஒரு வெடிப்பை போன்ற மரண எண்ணிக்கை மாநிலத்தில் இதுவரை ஏற்படவில்லை.  மருத்துவமனைகளிலும் எப்எல்டிசி-களிலும் (சிகிச்சை மையம்) அரசு உணவு வழங்குகிறது. ஏதேனும் குறிப்பிட்ட காரணங்களால் உணவு தாமதமானால் ‘அர சின் தோல்வி நோயாளி களுக்கு ஆபத்து’ என்று என்று ஒரு சானல் ஒளி பரப்பியது. பின்னர் அதற்கு வருத்தம் தெரிவிக்கப் பட்டது. அரசின் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளை தகர்க்க வரிந்து கட்டிக் கொண்டு ஒரு கும்பல் இத்த கைய பொய் செய்திகளை உற்பத்தி செய்கிறது.  கோவிட்டுக்கு எதிரான போராட்டம் மக்களின் உயி ருக்கான போராட்டமாகும். பொய்களைப் பரப்பி அதை தகர்க்க முயற்சிப்பவர்கள் எதையும் திருத்தப் போவ தில்லை. தவறான படத்தை வெளியிட்ட ஊடகங்கள் அதை இன்னும் சரி செய்ய வில்லை.  ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உரு வாக்கப்பட்ட செய்திகள் தண்ணீரை சேர்க்காமல் விழுங்கப்படுகின்றன. கேரள ஊடகங்கள் பொதுவாக எச்சரிக்கையுடன் செயல் பட்டன. எதிர்ப்பில் எச்சரிக்கை இருந்தது. அது தொடர வேண்டிய கட்ட மாகும். இதில் அனைத்து  ஊடகங்களும் அவர்க ளுக்கான தனிப்பட்ட விருப் பங்களை விலக்கி வைத்து நாட்டின் கூட்டான செயல் பாட்டில் பங்காளிகளாக வேண்டும் என்றார்.

;