tamilnadu

img

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு இல்லை வீட்டுக்கு வந்த மத்திய அமைச்சரிடம் எதிர்ப்பு தெரிவித்த எழுத்தாளர்

திருவனந்தபுரம், ஜன. 5- பாஜகவின் ‘வீடுகள் தோறும் பிரச்சார திட்டத்தின்’ ஒரு பகுதியாக கேரளத்தில் தனது வீட்டிற்கு வந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம்  குடியுரிமைச் சட்டத்தில் தனது கருத்து வேறுபாட்டை எழுத்தாளர் ஜார்ஜ் ஒனக்கூர் நேரடியாக தெரிவித்தார். கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் குடியுரிமை திருத்த சட்டத்தை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை பாஜக ஞாயிறன்று நாடு முழுவதும் துவக்கியது. வீடுகள்தோறும் மக்களை சந்திக்கும் இந்த திட்டத்தின் பகுதியாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திரு வனந்தபுரத்தில் தனது வீடுகள் சந்திப்பை துவக்கி னார். ஞாயிறன்று காலை, முதல் நபராக பிரபல மலை யாள எழுத்தாளர் ஜார்ஜ் ஒனக்கூரின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் குடியுரிமை சட்ட திருத்தத்தை நியாயப்படுத்தி பேசினார். ஆனால், பாரபட்சமான ஒரு சட்டத்தை தன்னால் ஆதரிக்க முடியாது என எழுத்தாளர் கூறியதும் அமைச்சரும் அவருடன் சென்ற பாஜகவினரும் ஏமாற்றமடைந்தனர்.   அமைச்சர் திரும்பிய பிறகு தனது நிலைப்பாட்டை செய்தியாளர்களிடம் ஜார்ஜ் ஒனக்கூர் தெளிவுபடுத்தினார். அப்போது, இந்தியன் என்பதே தனது மதம் என கூறினார்.  

;