tamilnadu

img

கேரளத்தில் மேலும் 61 பேருக்கு தொற்று... வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் 57 பேர்

திருவனந்தபுரம்:
கேரளாவில் மேலும் 61 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் 57 பேர் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிறன்று அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் உறுதி செய்யப்பட்டவர்களில் பாலக்காட்டில் இருந்து 12, காசர்கோட்டு 10, கண்ணூர் 7, கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களில் தலா
6 பேர். திருவனந்தபுரம், பத்தனம்திட்டா தலா 4, திரிச்சூர், வயநாடு, மலப்புரம் தலா 3,  கோழிக்கோட்டு 2, எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 61 பேர் ஞாயிறன்று கோவிட்- 19 நோய் தொற்றுக்கு உள்ளாகினர். 

இவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் (யுஏஇ -8, குவைத் -5, ஓமான் -4, சவூதி அரேபியா -1, கத்தார் -1, மாலத்தீவு -1) மற்றும் 37 பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் (மகாராஷ்டிரா -20, தமிழ்நாடு -6, தில்லி -5, கர்நாடகா -4, குஜராத், ராஜஸ்தான் தலா 1). தொடர்பு மூலம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலக்காடு மற்றும் கொல்லத்தில் தலா 2 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை நோய் இருப்பது கண்டறியப்பட்ட 670 பேரில் இதுவரை 590 பேர் குணமடைந்துள்ளனர்.விமான நிலையங்கள் வழியாக 19,662, துறைமுகம் வழியாக 1,621, செக் போஸ்ட் மூலம் 1,00,572, ரயில் மூலம் 9796 பேர் என மொத்தம் 1,31,651 பேர் மாநிலத்திற்கு வந்தனர். பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,34,654 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவற்றில் 1,33,413 பேர் வீடு / நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், மருத்துவமனை தனிமையில் 1241 பேரும் உள்ளனர். 208 பேர் ஞாயிறன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3099 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 67,371 நபர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில்  64,093 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.  மேலும், சென்டினல் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக சுகாதாரப் பணியாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், சமூக சேவையாளர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரிடமிருந்து 12,506 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 11,604 மாதிரிகளில் நோய் இல்லை. ஞாயிறன்று மேலும் 10 பகுதிகள் ஹாட் ஸ்பாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மாநிலத்தில் தற்போது 116 ஹாட்ஸ்பாட்கள் உள்ளதாக செய்திக்குறிப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;