மேற்கு ஆசியப் பகுதியில் பிரபலமான விளையாட்டு மல்யுத்தம் தான். துருக்கி, அஜர்பைஜன், கஜகஸ்தான் போன்ற நாட்டில் மல்யுத்த விளையாட்டுகள் பிரசித்திபெற்ற விழாவாக விளையாடுவார்கள். இந்த பகுதியில் களமிறங்கும் வீரர்கள் துடிப்பாக விளையாடுவார்கள். ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்களில் மேற்கு ஆசிய நாடுகள் அதிகளவில் பதக்கங்களைக் குவிக்கும். இதற்குக் காரணம் மாட்டிறைச்சி தான். மேற்கு ஆசியப் பகுதிகள் குளிர், வெப்பம் கலந்த மிதமான பகுதி என்பதால் அதிகளவில் மாட்டிறைச்சி உண்கின்றனர். இதன்மூலம் அதிக வலுகிடைப்பதால் மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை தொடரில் சாதிக்கின்றனர்.