tamilnadu

குஜராத் பட்டேல் சிலையில் மழைநீர் கசிவு ?

காந்திநகர்,ஜூன் 30- குஜராத் மாநிலத்தில் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்ல பாய்பட்டேல் சிலையில் உள்ளே அமைந்துள்ள பார்வையாளர் மாடத்தில் மழைநீர் கசிவு தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.  தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சிலையின் மார்புப் பகுதியில் அமைந்துள்ள பார்வை யாளர் மாடத்தில் மழைநீர் வழிந்து பெருகி யிருக்கும் காட்சிகளை அங்கு சென்ற வர்கள் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டி லான சிலையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களை மாவட்ட ஆட்சியரும், சிலையின் தலைமை நிர்வாகி யுமான ஐ.கே.பட்டேல் மறுத்துள்ளார். பார்வையாளர்கள் சிலையிலிருந்து இடையூறின்றி இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் சாளரம் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும், அதன் வழியாக மழை நீர் உள்ளே வருவது இயற்கையானது என்றும் தெரிவித்துள்ள அவர், தண்ணீரை  அகற்ற வடிகால் அமைப்பும் சுத்தம்  செய்யும் பணிகளை உறுதி செய்ய பணி யாளர்களும் உள்ளதாக கூறிக்கொண்டார்.