tamilnadu

img

போலிச்சாமியார் நித்யானந்தாவின் அகமதாபாத் ஆசிரமம் இடிப்பு

அகமதாபாத்,டிச.29- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  போலிச்சாமியார்  நித்யானந்தாவின் ஆசிரமம் இடிக்கப்பட்டது. அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய எல்லைக்குட்பட்ட தில்லி பப்ளிக் ஸ்கூல்  என்னும் மிகப்பெரிய கல்விக் குழுமப் பள்ளி யின் கிழக்குப் பகுதியில் நித்தியானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இந்த இடத்தை பள்ளி நிர்வாகம் கொடுத்திருந்தது. இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள்கள் இப்போது நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜனார்த்தன சர்மா  என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில்  ஆசிர மத்தில் சோதனை நடத்திய குஜராத் அரசு அதிகாரிகள் அங்கிருந்த இரு மேலாளர் களைக் கைது செய்தனர்,  விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக் காக பெருமளவிலான நிலம் பயன்படுத்தப் படும்போது அதில் 40 சதவீத  நிலத்தை நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இந்த விதிகளிலும் உரிய நடைமுறை பள்ளி நிர்வாகத்தால் பின் பற்றப்படவில்லை. அந்த இடத்தைத்தான் பள்ளி நிர்வாகம், நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குக் கொடுத்துவிட்டது என்பது அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து, பள்ளி அங்கீகாரத்துக் காக விண்ணப்பித்தபோது அந்த விண்ணப் பத்தில் குறிப்பிடப்பட்ட கட்டிடங்கள் தவிர வேறு கட்டிடங்கள் இருக்கக் கூடாது. அவற்றை பள்ளி நிர்வாகமே இடித்துவிட்டு, அந்த இடத்தை நகர மேம்பாட்டு ஆணை யத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று நகர மேம்பாட்டு ஆணையர் கோர்உத்தரவிட்டார். இதையடுத்து தில்லி பப்ளிக் ஸ்கூல்  நிர்வாகமே டிசம்பர் 28 அன்று நித்தியானந்தா  ஆசிரமத்தை இடிக்கத் தொடங்கியுள்ளது.

;