tamilnadu

காவி குல்லாவை கழற்றி எறிந்த அமித்ஷா பேத்தி

காந்தி நகர், ஏப். 1 -


குஜராத் மாநிலம், காந்தி நகர் மக்கள வைத் தொகுதியை, அத்வானியிடம் இருந்துபறித்துக்கொண்ட பாஜக தலைவர் அமித்ஷா, தனது செல்வாக்கை காட்டுவதற்கு, வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பெரும் கூட்டத்தைக் கூட்டினார். அவரது குடும்பத்தின ரும்கூட கலந்து கொண்டனர். அப்போது,தனது பேத்தியைத் தூக்கிக் கொஞ்சிய அமித்ஷா, அந்த குழந்தை அணிந்திருந்த வெள்ளை நிற பேன்சி தொப்பியைக் கழற்றிவிட்டு, பாஜக-வின் தாமரைச் சின்னம் பொறித்த, காவிக்குல்லாவை அணிவித்தார். ஆனால், அந்த குழந்தை என்ன நினைத்த தோ, அமித்ஷா குல்லாவை அணிவித்தஅடுத்த நொடியே அழுது அடம்பிடித்து, காவிக் குல்லாவை கழற்றி எறிந்தது. அமித்ஷா மீண்டும் மீண்டும் காவிக்குல்லாவை அணிவித்தபோதும், தொடர்ச்சியாக மூன்றுமுறை அந்த குல்லாவை தூக்கி வீசிவிட்டது. பின்னர், அதற்குப் பிடித்த பேன்சி வெள்ளைத் தொப்பியை அணிவித்ததும், மகிழ்ச்சியாக அணிந்து கொண்டது. இதனால், அமித்ஷா உள்ளிட்ட அங்கிருந்த பாஜக-வினர் திகைத்துப் போயினர்.

;