tamilnadu

img

நரிக்குறவர் இன மக்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருக கிராமசபையில் தீர்மானம்

ஊத்தங்கரை, அக்.4- காட்டேரி அருகே உள்ள நரிக் குறவர் குடியிருப்புக்கு குடிநீர், கழிப் பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் ஏற்படுத்தி தரநடவ டிக்கை எடுக்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, காட்டேரி ஊராட்சிக்குட்பட்ட அனுமந்தீர்த்தத் தில் கிராமசபை கூட்டம் காட்டேரியில் ஊராட்சி செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில்  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவ லர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற் றனர். இக்கிராமசபை கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் வி.கோவிந்தசாமி, மாவட்டப் பொரு ளாளர் கே.செல்வராஜ், நிர்வாகிகள்  வி.சுப்பிரமணி, என்சுந்தரம், மொளுகு ஆகியோர் பங்கேற்று பேசினர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங் கரை வட்டம், காட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டேரி கிராமத்தின் அருகே சுமார் 50க்கு மேற்பட்ட நரிக் குறவர் குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் ஊசி, பாசி மணி விற்று பிழைப்பு நடத்தி வரு கின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு குடிநீர், மின்சாரம், கழிப் பறை வசதிகள் இல்லை. இம் மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்றால் விரட்டிய டிக்கும் நிலை உள்ளது. பெண்கள் இயற்கை உபாதைக்கு சென்றால் மர்மநபர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டுவரி ரசீது வழங்க வேண்டும். நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தரும் வரை போர்க்கால அடிப்படையில் டிராக்டர் மூலம் குடி நீர் விநியோக்க நடவடிக்கை எடுக் கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கவும், ஊராட்சி முழுவதும் டெங்கு காய்ச்ச லால் அவதிப்பட்டுவரும் மக்களுக்கு உடனடியாக மருத்துவமுகாம் நடத்தி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள  கால்வாய்களை தூர்வார வேண்டும். குப்பை அள்ளுவது, கொசு மருந்து அடிப்பது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

;