tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வலியுறுத்தி மனிதச் சங்கிலி அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

தஞ்சாவூர், ஜன.13- குடியுரிமை சட்டத் திருத்தம், தேசியக் குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவ டிக்கைகளை கைவிட வேண்டும் என மத்திய அரசை  வலியுறுத்தியும், இதனை மாநில அரசு அமல்படுத்தக்கூடாது  என வலியுறுத்தியும், வரும் பிப்.22 அன்று 1 லட்சம் பேர் கைகோர்க்கும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து கட்சி, அனைத்து அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் சிறுபான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவல கத்தில், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பி.ஜி.ராஜேந்திரன், கோ.அன்பரசன், திராவிடர் கழகம் அமர்சிங், மதிமுக மாவட்டச் செயலா ளர் கோ.உதயகுமார் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், மாநகரச் செயலாளர் ந.குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.காசிநாதன், பி.கிருஷ்ண மூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி அய் யனாபுரம் முருகேசன், இந்திய ஜன நாயக கட்சி சிமியோன் சேவியர் ராஜ், மக்கள் அதிகாரம் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை இரா. அருணாசலம், கிருஸ்துவ இயக்கம் பிரான்சிஸ், கென்னடி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா ளர் எஸ்.எம்.ஜெய்னுலாபுதீன், மனித நேய மக்கள் கட்சி ஐ.எம்.பாதுஷா, எஸ்.டி.பி.ஐ.முகமதுஇக்பால், ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் எஸ்.முகமது அப்பாஸ், தமிழக மக்கள் ஐனநாயக கட்சி எஸ். பஷீர் அகமது கான், மல்லிப்பட்டினம் சோஷியலிச மீனவர் சங்க வீ.ஹரி ஹரன், தமிழ் தேச மக்கள் முன்னணி ஆலம்கான், ஏஐடியூசி நிர்வாகிகள் சி. சந்திரகுமார், ஆர்.தில்லைவனம், துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், “குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை கைவிட மத்திய அரசை  வலியுறுத்தி யும், மாநில அரசு அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், தஞ்சை மாவட்ட மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாதி, மதம் கடந்து 1 லட்சம் பேர் கைகோர்க்கும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் எதிர்வரும் பிப்ரவரி-22 அன்று நடத்துவது” என்று முடிவு செய்யப்பட்டது.  “மனிதச் சங்கிலி தஞ்சை மாவட்டத்தின் தென்கோடியான மல்லிப்பட்டினம் தொடங்கி அதிராம் பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்த நாடு, தஞ்சை, பாபநாசம், கும்ப கோணம், திருப்பனந்தாள் வழியாக மாவட்டத்தின் வடகோடியான அணைக்கரை வரை 150 கிமீ தூரம் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது” எனவும் முடிவு செய்யப்பட்டது. “இதில் அனைத்துக் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஐனநாயக சக்திகள், பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும்” என்றும் கூட்டத்தில் வேண்டுகோள் விடப்பட்டது.

;