கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்திலும், கிருஷ்ணகிரி பகுதியிலும் செய்யப்படும் விநாயகர் சிலை உள்ளிட்ட சிலைகள் பிரபலமானவை. இங்கு செய்யப்படும் சிலைகளை மும்பை, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்தவர்கள் வாங்கிச் செல்வார்கள். கொரோனா தொற்று பொதுமுடக்கத்தினாலும், வாகன போக்குவரத்து அனுமதி மறுப்பாலும் செய்யப்பட்ட சிலைகள் விற்பனையாகமல் தேங்கிக் கிடக்கிறது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய வாகன அனுமதியும், வாழ்வாதாரத்திற்கான உதவித் தொகையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.