tamilnadu

img

100 நாள் வேலைக்கு வசூல் வேட்டை

கிருஷ்ணகிரி, ஜூன் 21- கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் நாட்ராம்பாளயம் ஊராட்சியில் 100  நாள் வேலை திட்டத்தில் 3 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதில், ஒரு பகுதியினருக்கு மட்டும்  அடுத்தடுத்து வேலை கொடுக்கப்படு கிறது. கைரேகை பதியும் நாளன்று ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் வசூ லிக்கின்றனர். 10 ரூபாய் ஏன் வசூல் செய்கிறீர்கள்  எனக் கேட்டால், ஆயிரத்தெட்டு செலவு இருக்கிறது. உனக்கு பதில் சொல்ல வேண்  டிய அவசியமில்லை. “நாளையிலிருந்து நீ  வேலைக்கு வராதே” என மிரட்டுகிறார் கள். அடுத்த நாள் வேலைக்கு வந்தாலும்  கூட, வருகையை பதிவு செய்வதில்லை. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்டச் செய லாளர் காவேரி, தலைவர் மாரப்பா மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் தேவராஜ் ஆகியோர் சம்பவ இடத்  திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, ஒவ்வொருவரிடமும் 10  ரூபாய் வீதம் மாதம் 30 ஆயிரம் வசூல்  செய்யப்படுவதும், கூலியை பாதியாக குறைத்து வழங்குவதும் தெரிய வந்தது. மேலும் வருடத்தில் 6 மாதங்கள் வேலை நடந்தாலும், ஒருவருக்கு 30 முதல் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்குவ தும், 700 பேர் வேலை செய்தால் 800 பேர்  என கணக்கு எழுதி பணம் எடுப்பதும் தெரியவந்தது. 100 நாள் வேலைக்காக ஒதுக்கப்ப டும் நிதி ஊராட்சி அலுவலர்களின் சொந்த  நலனுக்காக தவறாகக் கையாளப்படு கிறது. எனவே மாவட்ட ஆட்சியரும், வருவாய்  அலுவலரும், மாவட்ட வளர்ச்சி அலுவல ரும் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி  பதிவின் போது 10 ரூபாய் வசூல் செய்வதை  தடுக்க வேண்டும், அனைவருக்கும் மு றையாக வேலையும், முழுமையான கூலி யும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் கோரிக்கை விடுத்தனர்.

;