tamilnadu

img

தொழிலின்றி அல்லாடும் முடிதிருத்துவோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட முடி திருத்துவோர் குடும்பங்கள் உள்ளன. குறிப்பாக ஓசூர், கிருஷ்ணகிரி நகரங்களில் மட்டும் எழுநூறுக்கும்  மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 95 விழுக்காட்டினர் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

வாடகையிலேயே கடைகளை நடத்தி வருகின்றனர். 50 சதவீதத்தினருக்கு பெற்றோர்,தம்பி, தங்கை என கூட்டு குடும்பமாக வசிக்கிறார்கள். ரேசன் அட்டையே உள்ளது. தனியாக குடும்ப அட்டை கிடையாது.இதுகுறித்து கொல்லப்பேட்டை லோகநாதன் கூறுகையில்,”ஊரடங்கு அறிவிக்கப்பட்ட திலிருந்து முடி திருத்தும் கடைகளை திறக்க முடியாமல் ஆறு ஏழு பேர் கொண்ட கூட்டுக் குடும்பங்கள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் அவதிப்படுகிறோம்” என்றார்.ஐடிஐ அருகே குடியிருக்கும் லட்சுமணன், “அண்டை மாநிலமான கர்நாடகாவில் முடி திருத்தும் கடைக்காரர்களுக்கு அந்த அரசாங்கம் 5 ஆயிரம் நிவாரணம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் எங்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கவும் இல்லை, நிவாரணப் பொருள்களும் வழங்கவும் இல்லை. முடி திருத்தும் கடைகளில் வேலை செய்யும் 500 க்கும் மேற்பட்ட குடும்பம் வருமானம் இல்லாமல் வாழ்க்கையை நடத்தவே சிரமப் பட்டு வருகிறது” என்று வேதனையுடன் கூறினார்.மத்திகிரியில் வசிக்கும் நாகராஜன்,”பல குடும்பங்களில் வீட்டு வாடகைக் கூட கட்ட வழி இல்லை?. பள்ளிக்கூடம் திறந்தால் பள்ளிக் கட்டணம் எப்படி செலுத்துவது என்று மன உளைச்சலில் உள்ளார்கள்” என்று கண்ணீர் வடித்தார்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஆனந்த குமார், செயலாளர் நாகேஷ் பாபு கூறுகையில்,” மாவட்டம் முழுவதுமுள்ள முடி திருத்துவோரின் நெருக்கடியை போக்க மாவட்ட ஆட்சியர் வருவாய் அலுவலரும் நிவாரணப் பொருள்கள் வழங்குவதுடன், நிவாரண உதவி தொகையாக ஐந்தாயிரம் வீதம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

;