tamilnadu

img

அதியன் ஆதிரை, கிஷோர் குமாருக்கு ஓசூரில் பாராட்டு விழா

கிருஷ்ணகிரி, டிச.31- ‘இரண்டாம் உலகப்போரின் முதல் குண்டு’ திரைப்பட இயக்குநர் அதியன் ஆதிரை, ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஆகியோருக்கு ஓசூரில் பாராட்டு விழா நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும், தமிழன்னை இலக்கிய மன்றமும் இணைந்து  நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் பொன் சங்கர் முன்னிலை வகித்தார்.  பைரவி கலைப்பள்ளி உரிமையாளரும் தமு எகச கிளைச் செயலாளருமான சுப்பையா சிவா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பழ.பாலசுந்தரம் வாழ்த்திப் பேசினார். மாநில துணை தலைவரும் நாடக  வியலாளருமான பிரளயன் இத்திரைப் படத்தையும் இயக்குநர் அதியன் ஆதிரை,  ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஆகியோரை யும் பாராட்டிப்பேசினார். தமிழன்னை இலக்கிய மன்றத்தின் தலைவர் மாதேஸ்வ ரன் இயக்குநர்அதியன் ஆதிரையை படப்பிடிப்பின் போது நேரில் பார்த்த, உணர்ந்த தன் அனுபவத்தை கூறினார்.  திரையரங்கில் ‘பரியேரும் பெருமாள்’  திரைப்படத்திற்கும் பாராட்டு விழா நடத்திய தையும் குறிப்பிட்டார். இயக்குநர், ஒளிப்பதி வாளர் இருவரையும் கவுரவப்படுத்தி கேடயம் வழங்கப்பட்டது. கிளை பொருளா ளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். இதுவரை இயக்குநர்களை துணை இயக்குநர்கள் கூட நெருங்கி பேசக் கூட முடி யாத சூழலை உடைத்து, சாதாரணமான வர்கள் கூட திறமை இருந்தால் இயக்குந ராக முடியும் சகஜமாக இருக்க முடியும்  என்பதற்கும், யாருக்காக எதற்காக திரைப் படம் எடுக்க வேண்டும் எனும் நோக்கத்துடன், புதிய தலைமுறை இயக்குநர்களை முற்போக்கு இயக்கமாக உருவாக்கி வரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான ரஞ்சித் செயல்படுவதாகவும் ஏற்புரையில் இயக்குனர் அதியன் ஆதிரை கூறினார்.  தொடர்ந்து பைரவி கலைப்பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை ‘தலைமுறை தலைதூக்குமா’ எனும் இப் படப்பாடலை வைசாலி சுப்பையாசிவா பாடி  துவக்கி வைத்தார். கேள்விகளுக்கு பதிலளித்த போது படம் வெற்றிப் படமாகவும், தரமானதாகவும் பார்கப்படுவதை விட பார்ப்பப்பவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பேசப்பட வேண்டும். 100 ஆண்டு இந்திய சினிமாவில் வெங்காயம், தக்காலி, எப்போ தாவது கோழிக்கறி சாப்பிடுவதை மட்டுமே காட்டிக் கொண்டிருந்த நிலையை உடைத்து  மாட்டுக்கறி சாப்பிடுவதையும் அதைப்  பற்றி பேசுவதையும் இயல்பாக காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு குண்டு கண்டுபிடிக்கப்படுமுன்பே எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது.. போர் நேர்ந்தல் என்னாகும் எனும் கேள்வியையும், பொதுவான கதையாடலுக்குள் சம்மந்தப் பட்ட பாத்திரங்களின் கலை, பண்பாடு, வாழ்நிலை இயல்பாகவும்,.சாதி, மதம்,  வர்க்கப்பிரிவு இந்த குண்டை விட கொடூர மானது எனவும் படம் பார்பவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது இதுவே எங்கள் நோக்கம், வெற்றி  என்றார். மாநில பொது செயலாளர் ஆதவன் தீட்சண்யா, கமலால யன், பெரியசாமி நிர்வாகிகள், எழுத்தாளர் கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;