tamilnadu

img

மிரட்டும் மழை சிக்கலில் மகளிர் டி-20 உலகக்கோப்பை

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படு கிறது. இந்த தொடரின் 7- வது சீசன் வரும் வெள்ளியன்று (21-ஆம் தேதி) தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் மோதுகின்றன.     தற்போது இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வரும்  நிலையில்,  மகளிர் உலகக்கோப்பைக் கான லீக் ஆட்டங்களுக்கு மழை யால் சிக்கல் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது மழை சீசன் களை கட்டி யுள்ளது. சொல்லப்போனால் கடந்த 6 மாத காலம் ருத்ரதாண்டவம் ஆடிய காட்டுத்தீயை இந்த மழை தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.  தற்போது இடைவெளி இல்லா மல் மழை பொழிந்து வருவதால் உலகக்கோப்பை தொடருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் பல மழையால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால் உலக க்கோப்பை தொடர் சுவாரஸ்யமின்றி தான் நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.