tamilnadu

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை

இந்திய அணியின் வெற்றி நடை தொடருமா?

இன்று இலங்கையுடன் மோதல்  

7-வது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.   இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் தலை மையில் களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் மூன்று லீக் ஆட்டத்தில் அசத்தலாக விளை யாடி ஹாட்ரிக் சாதனையுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னே றிய இந்திய அணி, சனியன்று நடை பெறும் தனது 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வெறும் சம்பிரதா யம் தான்.  இருப்பினும் முதல் இட அந்தஸ்துடன் தான் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என இந்திய வீராங் கனைகள் அடம் பிடிப்பதால் இலங்கை அணிக்கெதிரான ஆட்டமும் பரபரப் பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

நியூஸிலாந்து - வங்கதேசம்(13-வது லீக்) 
நேரம் : அதிகாலை 5:30

இந்தியா - இலங்கை(14-வது லீக்)
நேரம் : காலை 9:30

இரண்டு ஆட்டங்களும் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.  சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

;