tamilnadu

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை

இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை யுடன் லீக் ஆட்டங்கள் நிறைவுபெறு கிறது.  கடைசி லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் - தாய்லாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் - தென் ஆப்பி ரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்த இரண்டு ஆட்டங்களும் வெறும் சம்பிரதாய ஆட்டம் தான். ஏனென்றால் பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. இதனால்  இந்த ஆட்டம் இரு அணிகளுக் கும் எவ்வித பலனும் அளிக்கப்போவ தில்லை.  இதே போலத் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு ஏற்கெனவே முன்னேறிவிட்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும் முதல் இட அந்தஸ்துடன் அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி ஆக்ரோஷமாக விளையாடும்  என்பதால் கடைசி லீக் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

பாகிஸ்தான் - தாய்லாந்து (19-வது லீக்) 
நேரம் : காலை 9:30 

தெ.ஆ., -  மே.இ.தீவுகள் (20-வது லீக்) 
நேரம் : மதியம் 1:30 

இரண்டு ஆட்டங்களும் சிட்னி நகரில் நடைபெறுகிறது. சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்