நான் எதற்கும் தயாராக இருக்கும் குணம் கொண்டவன். உலகக்கோப்பை தொடரில் கடுமையான சவால் நிச்சயமாக இருக்கும். 4வது இடத்தில் களமிறங்க வேண்டியிருக்கும் என்ற சூழ்நிலை தற்போது உள்ளது என்பதை நன்றாக உணர்கிறேன்.என்னைப்பொறுத்தவரையில் எந்த இடத்தில் களமிறங்குகிறோம் என்பது முக்கியமல்ல. அதில் எப்படி விளையாடு கிறோம் என்பது தான் முக்கியம். நாட்டுக்காக விளை யாடும் போது அதுவே அதிக தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் அளித்த பேட்டியிலிருந்து