கோடை விடுமுறையால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (இண்டர் -30 ஓவர்) மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் காசர்கோடு - வயநாடு மாவட்ட அணிகள் போட்டியில் மோதின. முதலில் களமிறங்கிய காசர்கோடு அணி வயநாடு வீராங்கனைகளின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து வீராங்கனைகளும் ரன் கணக்கை துவங்கமால் டக் அவுட் ஆகினர். இதில் கொடுமையான சம்பவம் என்னவென்றால் ஆட்டமிழந்த 10 வீராங்கனைகளும் போல்ட் மூலம் ஆட்டமிழந்தது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வயநாடு 4 ரன்கள் உதிரியாக வழங்கியதால் காசர்கோடு அணி 5.5 ஓவர்களில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய வயநாடு அணி முதல்ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றியை ருசித்தது. கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மோசமான நிகழ்வு தற்போது தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.