tamilnadu

img

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் : நியூஸிலாந்து அணி அறிவிப்பு

டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அணி நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  டி-20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், சுற்றுப்பயணத்தின் இறுதி நிகழ்வான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் வெள்ளியன்று (21-ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.     

வீரர்கள் விபரம்: 

கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லதாம், டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், காலின் டி கிராந்தோம்மி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, நீல் வாக்னர், பிஜே வாட்லிங். 
 

;