tamilnadu

img

டி-20 உலகக் கோப்பை  விவிஎஸ் லக்‌ஷ்மணின் இந்திய அணி விபரம்

6-வது டி-20 உலகக் கோப்பை (ஆடவர்) ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் தொடங்க இன்னும் 9 மாத காலம் உள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தற்போதே பயிற்சியைத் தொடங்கியுள்ளன. சீனியர் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் கனவு அணி ஒன்றை அறிவித்து அதில்  இடம்பெறும் வீரர்களைத் தேர்வு செய்தால் நிச்சயம் கோப்பை வெல்லலாம் என அறிவுரையும் கூறுவது வழக்கம். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மண் தனது கனவு அணியைத் தேர்வு செய்துள்ளார். அந்த வீரர்கள் பட்டியலில் அனுபவ வீரர் தோனி மற்றும் சூப்பர் பார்மில் உள்ள ஷிகர் தவன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடமில்லை. வீரர்கள் விபரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா, சஹால், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, முகமது ஷமி, தீபக் சஹார், புவனேஸ்வர் குமார். 

;