இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியில் நீல் வாக்னருக்கு பதிலாக மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வெலிங்டனில் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் நீல் வாக்னரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீல் வாக்னர் இன்னும் அணியில் இணையவில்லை. இந்த நிலையில், மேட் ஹென்றி இன்று நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹென்றிக்கு அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் லெவனில் இடம் பிடிக்க இவருக்கும் கைல் ஜேமிசனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.