tamilnadu

img

ஒரே தொடரில் ஹீரோவான கே.எல்.ராகுல்

கண்ணூர் லோகேஷ் ராகுல் என்ற முழுப்பெயருடைய ராகுலை கிரிக்கெட் உலகம் கே.எல்.ராகுல் என அழைக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம் வரும் இவர் கர்நாடக மாநிலத்தின் கேரள எல்லை பகுதியான மங்களூருவில் பிறந்தவர். ரஞ்சி, விஜய் ஹசாரே போன்ற தொடர்களில் நல்ல அனுபவம் பெற்றுள்ள ராகுல், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.  மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் இந்திய அணியின் வெற்றிக்கு தொடர்ந்து உதவி வருகிறார். நட்சத்திர வீரராக இருந்தாலும் பார்ம் பிரச்சனையால் அடிக்கடி திணறுவதால் சாதனை ஏதும் ருசிக்க முடியாமல் நம்மை நம்பிய அணிக்காக ஓரளவு ரன்களை சேர்த்துவிட்டு பெவிலியனில் அமர்ந்து  விடுவார். இதுதான் அவருடைய வழக்கமான வேலை.   

அதிரடி பேட்டிங்கிற்கு ஏற்ப பீல்டிங்கிலும் நன்றாக ஜொலிக்கும் ராகுல்   ஐபிஎல் தொடரில் பெங்களூரு, பஞ்சாப் அணிக்காகவும், இந்திய அணிக்காக  டெஸ்ட் போட்டியில் மாற்று வீரராக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். ஆனால் ராகுலின் விக்கெட் கீப்பிங்கை அன்றைய கிரிக்கெட் உலகம் கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர் வெறும் பேட்ஸ்மேன் தான் என நினைத்துக்கொண்டிருந்தனர்.  இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட் முதல் ஆட்டத்தில் காயம் காரணமாக விலக இந்திய அணி நிர்வாகம் ராகுலை மாற்று விக்கெட் கீப்பிங்காக களமிறக்கியது. பண்டை விட அசத்தலாக விக்கெட் கீப்பிங் செய்தது மட்டுமில்லாமல் கடைசி 2 ஒருநாள் போட்டியில் பேட்டிங்கிலும் அசத்தினார். குறிப்பாக 2-வது ஒருநாள் போட்டியில் 5-வது வீரராக களமிறங்கி 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இவ்வாறு ஆஸ்திரேலிய தொடரில் தனக்கு சாதாரணமாக வழங்கப்பட்ட விக்கெட் கீப்பிங் பொறுப்பை  உடும்பு பிடி போல பிடித்து செயல்பட்ட ராகுல் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சொத்தாக உருவெடுத்துள்ளார். ராகுலின் இந்த திடீர் வளர்ச்சி மற்ற இளம் வீரர்களிடம் கடும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு 

விக்கெட் கீப்பிங்கில் தனி பயிற்சி இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறார். சொல்லப்போனால் விக்கெட் கீப்பிங் துறையில் சுழலும் ரிஷப் பண்டிற்கு இவர் போதுமானதாக இருக்கிறார்.  எந்த வரிசையிலும் இறங்கினாலும் அந்த இடத்திற்கு ஏற்ப ரன்கள் குவிக்கும் சிறப்பு இயல்பை பெற்றுள்ளார். குறிப்பாக நிதானம், அதிரடி, ஆக்ரோஷம் என அனைத்தையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்க தயார் நிலையில் இருப்பதை போன்று கம்பீரமாக இருக்கிறார். பீல்டிங்கிலும் பட்டாம்பூச்சியை போன்று பறக்கிறார் என்பதால் இந்திய அணியின் 4 துறைகளில் இவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

;