games

img

ஐபிஎல் தொடரில் 4ஆவது முறையாக 600 ரன்கள் கடந்து கே.எல்.ராகுல் புதிய சாதனை!  

நடப்பு ஐபிஎல் தொடரில் 600 ரன்கள் கடந்து கே.எல்.ராகுல் புதிய சாதனையை படைத்துள்ளார்.  

நடப்பு ஜபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.  

இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. இதன்பின் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  

தொடர்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்திருந்தாலும், லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த சீசனில் 600 ரன்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 616 ரன்கள் குவித்துள்ளார்.      

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, 2021 ஆம் ஆண்டில் 626 ரன்கள், 2020 ஆம் ஆண்டில் 670 ரன்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டில் 659 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார்.        

4ஆவது முறையாக 600 ரன்களை கடந்த கே.எல்.ராகுல், தற்போது கிரிஸ் கெய்ல் மற்றும் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.