tamilnadu

img

டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா புதிய சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்த ரன் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. இந்த போட்டியில், அவர் 8 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்கள் கைப்பற்றினார். இதன் மூலம் குறைந்த ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். மேலும், பும்ரா விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் (11 போட்டி), இது 4- வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 1990-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சண்டிகாரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், வெங்கடபதி ராஜூ 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. மேலும், ஹர்பஜன் சிங் 13 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார்.
 

;