tamilnadu

img

மன்ஜோத் கல்ராவின் தடை உத்தரவு நியாயமா?

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ரன் மிஷினாக வலம் வரும் மன்ஜோத் கல்ராவின் அசத்தலான ஆட்டத்தின் உதவி யால் இந்திய இளையோர் அணி (யு-19) நியூஸி லாந்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியது.   துடிப்பாக பேட்டிங் செய்வதால் ரஞ்சிக்கோப்பை தொடரில் தில்லி அணிக்காக விளையாட இருந்தார். ஆனால் கல்ராவின் வயது கணிக்கும் சான்றிதழில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து தில்லி கிரிக்கெட் சங்கத்தின் குறைதீர்க்கும் அதிகாரியாக முன்னாள் நீதிபதி பதார் துரேஸ் அகமது துரித விசாரணை மேற்கொண்டு மன்ஜோத் கல்ராவிற்கு 2 ஆண்டு  தடை விதித்துள்ளார். இதன்மூலம் இந்த வருட ரஞ்சி டிராபியில் விளையாட முடியாது. ஒரு வருடம் முடிந்த பின்னர் கிளப் வகையிலான தொடர்களில் விளையாடலாம். மன்ஜோத் கல்ரா தனது சர்ச்சைக்குரிய வயதுச் சான்றிதழுடன் சர்வதேச தொடரில் பங்குபெற்று கோப்பையுடன் கொண்டாடினார். ஆனால் சாதாரண ரஞ்சிக்கோப்பை தொடரில் அவரது வயது சான்றிதழில் முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வளரும் இளம்வீரரின் பார்மில் பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது.

;